பிப்.14- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்!

lawrence wong says about foreign workers
PHOTO: MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION

வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.30 PM மணியளவில், 2023- ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சிங்கப்பூர் துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றவிருக்கிறார்.

சிங்கப்பூரில் மாத வாடகை S$6,200 – உச்சத்தை தொடும் வாடகை

பட்ஜெட் நிகழ்வுகள் அனைத்தும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே காணும் வகையில், நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளப்பக்கங்கள், தொலைக்காட்சி சேனல்கள், வானொலிகள், நிதியமைச்சரின் ஃபேஸ்புக் பக்கத்திலும் நேரலைச் செய்யப்படும்.

நிதியமைச்சரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளப்பக்கங்களில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் உடனுக்குடன் வெளியிடப்படும்.

பட்ஜெட் அறிக்கையை முழுமையாகப் பெறுவதற்கு சிங்கப்பூர் நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று தங்களது மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட்டு பதிவுச் செய்துக் கொள்ளலாம். வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி அன்று காலை 09.00 AM மணிக்குள் மின்னஞ்சலைக் குறிப்பிட்டுப் பதிவுச் செய்துக் கொள்ளலாம்.

மலேசியாவில் களைகட்டியது தைப்பூசத் திருவிழா… அலகு குத்தியும், காவடி எடுத்தும் பத்துமலை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கைத் தாக்கல் செய்த பிறகு, பதிவுச் செய்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் முழு பட்ஜெட் அறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17- ஆம் தேதி அன்று ஆங்கிலத்திலும், பிப்ரவரி 20- ஆம் தேதி அன்று மாண்டரினிலும் (Mandarin) மொழியில் இருவர் பட்ஜெட்டை மொழிப்பெயர்ப்பு செய்வர் என ‘REACH’ தெரிவித்துள்ளது.