சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

Coronavirus: 9 new cases confirmed, 5 imported cases
Three of the new cases are linked to a private dinner function held at Joy Garden restaurant at Safra Jurong on Feb 15, which is Singapore's largest cluster with 43 cases (Photo: Straits Times)

சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 12) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 187ஆக உயர்ந்துள்ளது.

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து குணமடைந்து யாரும் வீடு திரும்பவில்லை.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 96ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், 9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

புதிய சம்பவங்கள்

இதில் 2 பேர், மலேசியாவில் ஒரு மசூதியில் நடந்த திரளானோர் கலந்துகொண்ட மதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

இவற்றில் ஐந்து வெளிநாட்டில் இருந்து வந்த சம்பவங்களில், அவை இரண்டும் அடங்கும்.

மூன்று புதிய நபர்கள், சாஃப்ரா ஜுராங்கில் வட்டாரத்துடன் தொடர்புடையவர்கள், இதில் மொத்தம் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று CNA குறிப்பிட்டுள்ளது.