சிங்கப்பூரில் நீண்ட நேரம் காத்திருக்கும் சுமார் 90 பேருந்து சேவைகள் – காரணம் என்ன?

File Photo Via SMRT

பேருந்து ஓட்டுனர்கள் அதிகமானோர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், சுமார் 90 பேருந்து சேவைகள் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் நீண்ட நேரம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட பேருந்து ஓட்டுனர்கள், மொத்த பேருந்து ஓட்டுநர் எண்ணிக்கையில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர் என்று மூத்த போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் இன்று (பிப்ரவரி 28) நாடாளுமன்றத்தில் கூறினார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இரு ஊழியர்களை தூக்கிய போலீஸ் – பரபரப்பான விமான நிலையம்!

இதற்கு காரணம் அதிக தடுப்பூசி, பூஸ்டர் விகிதங்கள் மற்றும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Omicron வகை கிருமித்தொற்று காரணமாக சமூகத்தில் COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திரு சீ குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் பேருந்து நிறுவனங்கள் கூறின.

மேலும், அத்தியாவசிய பேருந்து சேவைகள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் திரு சீ கூறினார்.

அதிக பயணிகள் கொண்ட சாத்தியமான இடங்களுக்கு அதிக இரட்டை அடுக்கு பேருந்துகள் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு SHN, Travel History காலம் என்ன? – மேலும் நடப்பில் உள்ளதை அறிவோம்