சிங்கப்பூர் தீயணைப்பு படையில் புதிய மீட்பு வாகனம் – 90மீ வரை நீளும்… நிமிடத்துக்கு 3,800லி தண்ணீரை பீச்சியடிக்கும்!

(Photo: SCDF/FB)

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மிக உயரமான தீயணைப்பு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புத் திறன்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் இந்த புதிய இரு வாகனங்கள் அடுத்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சேவைக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த புதிய வாகனத்தின் சிறப்பு என்னவென்றால், அது 90 மீட்டர் வரை நீளும் தன்மையுடையது. அதாவது 30-அடுக்கு உயர கட்டிடம் வரை மேலோங்கி நீளும் தன்மை கொண்டது அது.

மனைவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து மாறி மாறி நாசம்… ஆன்லைனில் செயல்பட்ட குழு – 4 பேருக்கு சிறை

தீ மற்றும் மீட்பு வாகனம் கடந்த புதன்கிழமை சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த தீ பாதுகாப்பு ஆசிய மாநாடு மற்றும் கண்காட்சியின் போது அறிமுகம் செய்யப்பட்டது.

கல்லாங் தீயணைப்பு நிலையம் மற்றும் பொங்கோல் தீயணைப்பு நிலையங்களில் இந்த இரு வாகனங்களும் அடுத்த ஆண்டு சேவை புரியும்.

இது குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு SCDFன் பணித் திட்ட கருத்தரங்கில் விளக்கி கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீயணைப்பு வீரர்கள் நிற்கும் தளம் 500 கிலோ வரை எடை தாங்கக்கூடியது, ஒரு நிமிடத்திற்கு 3,800 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்டது.

சிங்கப்பூரில் காணாமல் போனவர் மரணம் – ஆடவருக்கு மரணத்தில் தொடர்பு இருக்கலாம் என கைது