ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு!

ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு!
Photo: Hindu Endowments Board

 

ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதலான போனஸ் – ஆகஸ்ட் மாதமே வழங்கப்படும்

அந்த வகையில், ஜூலை 28- ஆம் தேதி ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple) உள்ள அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மாரியம்மன் உற்சவர் சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, புடவை அணிவிக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் வலம் வந்த மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதேபோல், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple), காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களாலும், நகைகளாலும் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், காளியம்மன் உற்சவ சிலைக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலம் நடைபெற்றது.

போதைப்பொருள் கடத்தல்: இருவருக்கு மரண தண்டனை – சட்டம் அனைவருக்கும் சமம்

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple), பெருமாளுக்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மி Sri Mahalakshmi) அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு விஷேச பூஜைகள், தீபாராதனைகளும் நடைபெற்றது.