போதைப்பொருள் கடத்தல்: இருவருக்கு மரண தண்டனை – சட்டம் அனைவருக்கும் சமம்

போதைப்பொருள் கடத்தல்: இருவருக்கு மரண தண்டனை - சட்டம் அனைவருக்கும் சமம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 45 வயதான சிங்கப்பூர் பெண் ஒருவருக்கு நேற்று (ஜூலை 28) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சரிதேவி பிண்டே ஜமானி என்ற அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

2004க்குப் பிறகு சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட முதல் பெண் இவர் ஆவார்.

சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதலான போனஸ் – ஆகஸ்ட் மாதமே வழங்கப்படும்

நீதிமன்ற ஆவணங்களின்படி, கடத்தல் நோக்கத்திற்காக 30.72 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 2018 ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று சரிதேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக, 2016 ஜூன் 17 அன்று செங்காங் எச்டிபி பிளாக்கில் CNB மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் போதைப்பொருளுடன் பிடிபட்டார்.

2004 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று, 30.16 கிராம் டைமார்ஃபின் அல்லது ஹெராயின் வைத்திருந்ததற்காக 36 வயது சிங்கப்பூர் பெண் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரிதேவி தூக்கிலிடப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னர் 57 வயதான முகமட் அஜிஸ் பின் ஹுசைன் என்ற சிங்கப்பூர் நபருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கிய விமானம் – கடும் வெப்பம் தான் காரணம்