சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்தில் சுமார் 3,800 நிறுவனங்கள் மூடல் – சீ ஹாங் டாட்..!

About 3,800 companies closed down in April; expect uptick in coming months: Chee Hong Tat
About 3,800 companies closed down in April; expect uptick in coming months: Chee Hong Tat

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்தில் சுமார் 3,800 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்று வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் திரு. சீ ஹாங் டாட் (ஜூன் 5) தெரிவித்துள்ளார்.

இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒப்பிடுகையில், அதே மாதத்தில் சராசரியாக 3,700 பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள் – நடிகைகள் ட்வீட்!

எவ்வாறாயினும், சிங்கப்பூர் பொருளாதாரத்தில் இந்த COVID-19 தொற்றுநோய் தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதால், வணிக நிறுத்தம் வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதே காரணத்தால் புதிய தொழில்களின் உருவாக்கம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 3,800 வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டன, இது 2015 – 2019க்கு இடையில் இதே காலகட்டத்தில் 5,500 இருந்தது . மேலும் பெரும்பாலான துறைகளில் வீழ்ச்சி காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிருமித்தொற்றால் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த வர்த்தகங்கள் ஆண்டு இறுதிவரை பாதிப்பை எதிர்நோக்கக்கூடும் என்று திரு சீ கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம், பயோமெடிக்கல் உற்பத்தி, மற்றும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு போன்ற துறைகள் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற வணிக மூடல் மற்றும் பணிநீக்கங்களைத் தவிர்க்க முடியாது என்றும் திரு சீ கூறினார்.

மேலும் திறன்கள் தொகுப்பில் (Skills Package), பொது மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் திட்டங்கள் இருக்கும் என்று திரு சீ கூறினார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 261 பேர் பாதிப்பு – 11 பேர் சமூக அளவில் பாதிப்பு..!