“திருப்தியா இருக்கு! ” – சிங்கப்பூரில் தங்கி பணிபுரிவது திருப்தியாக இருப்பதாக தெரிவித்த இல்லப் பணிப்பெண்கள்

singapore

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூரில் வசித்து பணி செய்தது திருப்தி அளிப்பதாக 99 விழுக்காடு பணிப்பெண்கள் தெரிவித்துள்ளனர். Covid-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கடந்த ஆண்டு குறைவான இல்லப் பணிப்பெண்களே மாதத்தில் ஒரு நாளாவது ஓய்வு நாளை பயன்படுத்திக்கொண்டதாக மனிதவள அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் ஏறக்குறைய 93% பணிப்பெண்களுக்கு மாதத்தில் ஒரு நாள் ஓய்வு கிடைத்தது. இந்த எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் 98 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு covid-19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.தொற்று பரவல் காரணமாக பணிப்பெண்கள் வீட்டிலேயே தங்கி இருக்கக்கூடும் என்று அமைச்சகம் கூறியது.

இந்த ஆய்வு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு நவம்பர் மாதத்திற்கும் இடையில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பெரும்பாலான வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் சிங்கப்பூரில் வாசிப்பதும் பணி செய்வதும் திருப்தி அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் சிங்கப்பூரில் வேலை செய்வது நிறைவாக இருப்பதாகவும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை இவ்வாறு எங்கு பணி செய்ய பரிந்துரைக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 99 விழுக்காட்டுக்கும் அதிகமான பணிப்பெண்கள் சிங்கப்பூரில் வேலை செய்வது தங்களுக்கு திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பிடம், உணவு, மன ரீதியான ஆதரவு போன்றவற்றின் தொடர்பில் பணிப்பெண்களின் திருத்தி அடங்கியுள்ளதாக கூறினர்.

1208 இல்லப் பணிப்பெண்களும் ,802 முதலாளிகளும் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூரில் தங்கி பணி புரியும் பணிப்பெண்களின் அனுபவம் மற்றும் முதலாளிகளின் அனுபவம் போன்றவற்றிலிருந்து நல்ல புரிதலை பெறும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக மனிதவள அமைச்சகம்