“என் அப்பா விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.. வீடியோ ஆதாரம் வேண்டும்” – பதிவில் பிள்ளை உருக்கம்

என் அப்பா விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்
SPF

தெம்பனிஸ் அவென்யூ 5 மற்றும் தெம்பனிஸ் அவென்யூ 1 சந்திப்பில் ஏற்பட்ட விபத்தில் 48 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்க முன்வர வேண்டி, கடந்த செப்.12 காலை “Singapore roads accident.com” என்ற Facebook பக்கத்தில் பதிவு ஒன்று வெளியானது.

“வெளிநாட்டவர்கள் இதை மறதியாக கூட செய்யாதீர்கள்” – அபராத எச்சரிக்கை பெற்ற வெளிநாட்டவரின் எச்சரிக்கை

இறந்தவரின் பிள்ளை எழுதுவது போல் அந்த பதிவு பெயர் குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது.

“என் அப்பா இன்று காலை 7.30 to 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் விபத்தில் சிக்கி, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்துவிட்டார்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

“அந்தப் பகுதியைச் சுற்றி போலீஸ் CCTV கேமரா இல்லாததால் என்ன நடந்தது என்பது தெரிய வேண்டும்.”

மேலும், “விபத்துக்கான ஆதாரமாக வீடியோ காட்சிகள் மட்டுமே வேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து குறித்த போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டையை வழங்கி வேலைபார்க்க வைத்த சிங்கப்பூரரர்