“வெளிநாட்டவர்கள் இதை மறதியாக கூட செய்யாதீர்கள்” – அபராத எச்சரிக்கை பெற்ற வெளிநாட்டவரின் எச்சரிக்கை

foreigner fined warning spore
Pic: Nuria Ling/TODAY

தான் பயன்படுத்திய தட்டு மற்றும் கப்புகளை அப்புறப்படுத்தாமல் சென்ற வெளிநாட்டவருக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது.

அந்த வெளிநாட்டவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டையை வழங்கி வேலைபார்க்க வைத்த சிங்கப்பூரரர்

உணவகத்திற்கு சென்ற அவர் சாப்பிட்டு முடித்த பிறகு தான் பயன்படுத்திய கப்பு மற்றும் தட்டுகளை முறையாக அப்புறப்படுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

உணவகத்தில் இருந்து நடந்து செல்லும்போதே ​​​​எச்சரிக்கை அடங்கிய சீட்டு அவரிடம் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“அதை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்! எனக்கு எச்சரிக்கை சீட்டு வழங்கப்படுவது இதுவே முதல் முறை,” என்று அவர் வலைதளப் பதிவில் கூறியுள்ளார்.

அதில் அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால், மீண்டும் உண்ட தட்டு மற்றும் கப்புகளை முறையாக அப்புறப்படுத்தவில்லை என்றால், அவருக்கு S$300 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மற்ற வெளிநாட்டவர்களும், சிங்கப்பூரில் உள்ள பொது உணவகங்களில் உணவருந்திய பிறகு தங்கள் தட்டுகளை அப்புறப்படுத்துமாறு அந்த மாணவர் கேட்டுக்கொண்டார்.

2021 ஆம் ஆண்டு செப். 1 முதல், உணவங்காடி நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்படுத்திய தட்டுகள் மற்றும் கப்புகளை அப்புறப்படுத்துவது கட்டாயமாகும்.

2023 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல், அவ்வாறு செய்யத் தவறியவர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) ஆகியவை தெரிவித்தன.

அனைத்து உணவகங்கள், காப்பிக்கடைகளில் ஜூன் 1 முதல் கடும் நடவடிக்கை – மீறினால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் கூட்ட நேரிசல்? – புதிய ஊழியர்களை எங்கே தங்க வைப்பது… அவகாசம் கேட்கும் MOM