வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் கூட்ட நேரிசல்? – புதிய ஊழியர்களை எங்கே தங்க வைப்பது… அவகாசம் கேட்கும் MOM

migrant workers dormitory need time check
(Photo: Reuters / Edgar Su)

சிங்கப்பூருக்கு புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்களை அதிக நெரிசலான தங்கும் விடுதிகளில் தங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த கூடுதல் அவகாசம் தேவை என மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

மேலும், தேவையான ஆவணங்கள் அனைத்தும் முறையாக உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக MOM கூறியுள்ளது.

சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளின் வேலைகள் குறைவு

அதில் நேரில் சென்று மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உட்பட கூடுதல் சரிபார்ப்பு சோதனைகள் நடத்தப்படலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தான் தங்கும் விடுதிகளுக்கு வெளியே தங்குவதற்கான ஒப்புதல் அனுமதிகள் வழங்க ஆறு வாரங்கள் ஆவதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு MOM பதிலளித்தது.

புதிதாக வரும் ஊழியர்களை தங்கும் விடுதிகள், கட்டுமான தளங்களில் அமைக்கப்படும் தற்காலிக குடியிருப்புகள், தற்காலிக உரிமம் பெற்ற குடியிருப்புகள் அல்லது அவர்களின் சொந்த தங்குமிடங்களில் தங்க வைத்தால் ஒரு வாரத்துக்குள் அனுமதி கிடைத்துவிடும் என சொல்லப்பட்டுள்ளது.

புதிதாக வரும் CMP வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிட ஆதாரத்தை முதலாளிகள் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வரும் செப்.19 முதல் இது நடப்புக்கு வரும்.

இது பற்றிய முழுத் தகவல்:

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கு இவை முக்கியம்: செப்.19 முதல் கட்டாயம் – மீறினால் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து

சிங்கப்பூரில் உயரும் சம்பளம்.. பெரும்பாலான முதலாளிகள் முடிவு – 2024 முதல் பிளான்