சிங்கப்பூரில் உயரும் சம்பளம்.. பெரும்பாலான முதலாளிகள் முடிவு – 2024 முதல் பிளான்

migrant-workers stray dogs-cats bonds
ItsRainingRaincoats/Facebook

சிங்கப்பூரில் பெரும்பாலான முதலாளிகள் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயரத்திக்கொடுக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு முதல் அதனை நடப்புக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

செவ்வாயன்று வெளிவந்த கணக்கெடுப்பு ஆய்வு முடிவுகளின்படி, எதிர்கால பொருளாதார உயர்வுகள் குறித்த நம்பிக்கை இல்லாவிட்டாலும் நிறுவனங்கள் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன.

கிட்டத்தட்ட நிரம்பிய வெளிநாட்டு ஊழியர் விடுதிகள்.. வேலை அனுமதிக்கு நீண்ட காலம் எடுக்கலாம்

கடந்த ஜூலை மாதம் நடந்த ஆய்வில் பதிலளித்த 67 சதவீத நிறுவனங்கள், அடுத்த 12 மாதங்களில் சராசரியாக 6 சதவீதம் சம்பளத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தன.

மேலும் அடுத்த 12 மாதங்களில் ஊதியத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று 32 சதவீத நிறுவனங்கள் தெரிவித்தன.

இறுதியாக, 1 சதவீத நிறுவனங்கள் ஊதியத்தை குறைக்க பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்தன.

சம்பளத்தை நாங்கள் ஏற்கனவே உயரத்தி விட்டோம் என்று 76 சதவீத நிறுவனங்கள் பதிலளித்தன. அதாவது கடந்த 12 மாதங்களில் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்ததாக அவர்கள் கூறினர்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

73 சதவீத சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) கடந்த 12 மாதங்களில் ஊதியத்தை உயர்த்தியுள்ளன.

மேலும் 62 சதவீத நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் ஊதியத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வருடா வருடம் உயர்த்தும் நிறுவனங்கள்

ஆய்வில் பதிலளித்த 61 சதவீத நிறுவனங்கள், கடந்த 12 மாதங்களில் சம்பளத்தை உயர்த்தி கொடுத்ததாகவும், மேலும் அடுத்த 12 மாதங்களுக்கும் மீண்டும் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் கூறின.

இந்த ஆண்டு ஜூலை 20 முதல் 31 வரை, மனிதவளம் மற்றும் ஊதியங்கள் பற்றிய ஆய்வை சிங்கப்பூர் வணிகக் கூட்டமைப்பு (SBF) நடத்தியது.

இதில் சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் உட்பட 282 நிறுவனங்கள் பங்கு பெற்று பதிலளித்தன.

வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை – CCTV காட்சிகளில் அம்பலமான குற்றங்கள்