அனைத்து உணவகங்கள், காப்பிக்கடைகளில் ஜூன் 1 முதல் கடும் நடவடிக்கை – மீறினால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்

ask-for-particulars-tray-return
Pic: Bismillah Biriyani

சிங்கப்பூரில் அனைத்து உணவக நிலையங்கள், காபி கடைகள் மற்றும் உணவு அங்காடிகளில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் தங்கள் தட்டுகள் மற்றும் கப்புக்கள் என அனைத்தையும் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இருந்து வருகிறது.

அவ்வாறு செய்யத் தவறும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்பதும் அறிந்த ஒன்றுதான்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் முன்னாள் அர்ச்சகர்க்கு 6 ஆண்டுகள் சிறை

ஆனால், இனி அதனை செய்ய தவறும் வாடிக்கையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

அதாவது ஜூன் 1, 2023 முதல், அவ்வாறு செய்யத் தவறியவர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) ஆகியவை தெரிவித்துள்ளன.

ஜூன் 1 முதல், பயன்படுத்திய தட்டுகள் மற்றும் கப்புகளைத் திருப்பித் தராத நபர்களின் விவரங்களை அமலாக்க அதிகாரிகள் சேகரிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல் முறை இந்த தவறை செய்யும் நபர்களுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கையும், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்பவர்களுக்கு அபராதம் அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வரை, அவ்வாறு செய்யத் தவறிய நபர்களிடம் அறிவுரை மட்டுமே வழங்கப்படுகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்