மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்: சாலையில் குட்டிக்கரணம் அடித்து தீ பற்றி கொடூர விபத்து – (காணொளி)

Raven Qiu/ SG Road Vigilante

பான் தீவு அதிவிரைவு சாலையில் (PIE) கார் விபத்துக்குள்ளானதில் 32 வயதான ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாம்சன் சாலைக்கு முன்பாக சாங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும் PIEல் இந்த விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்தது.

“சிங்கப்பூர் செல்ல வேண்டாம்” என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய நாடு…!

இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள், SG Road Vigilante என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இந்த விபத்து குறித்து ஜன. 31 அதிகாலை 1.04 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நேற்று திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது.

மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்தது.

லோயாங் டிரைவில் ஏற்பட்ட அபாயகரமான இரசாயனக் கசிவு