சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர், குழந்தைகள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

accident-school-bus-cte-tpe
Shin Min Daily News

சென்ட்ரல் அதிவிரைவுச் சாலையில் (CTE) சிலேத்தர் வெஸ்ட் லிங்கிற்குள் செல்லும் ஸ்லிப் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த மினி பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்தது.

இந்த விபத்து இன்று பிப்ரவரி 7ஆம் தேதி காலை 8:10 மணியளவில், தெம்பனீஸ் அதிவிரைவுச் சாலை (TPE) நோக்கி செல்லும் போது ஏற்பட்டது.

“இனிமே கட்டுப்பாடு கிடையாது… தாராளமா வரலாம்” – அறிவிப்பை வெளியிட்டு அசத்திய நாடு

இதில் ஓட்டுநர், மாணவர்கள் உட்பட மொத்தம் 9 பேர் காயமடைந்தனர், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இரண்டு பேர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதிப்படுத்தினர்.

மேலும், ஏழு பேர் சிகிச்சைக்காக KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்குள்ளான பேருந்தில் அதிக சேதம் ஏற்பட்டது.

விதிகளை மீறி ஒன்று கூடிய வெளிநாட்டவருக்கு S$3,000 அபராதம்..!