விதிகளை மீறி ஒன்று கூடிய வெளிநாட்டவருக்கு S$3,000 அபராதம்..!

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

சிங்கப்பூரில் பெண் ஒருவர் தனது அலுவலக வீட்டில் 14 பேருடன் குழு வரம்பை மீறி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டது.

அதாவது, கடந்த ஆண்டு அதிகபட்ச குழு ஒன்றுகூடல் எண்ணிக்கை எட்டாக இருந்தபோது, அவர்கள் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வரம்பை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.​​​​

“இனிமே கட்டுப்பாடு கிடையாது… தாராளமா வரலாம்” – அறிவிப்பை வெளியிட்டு அசத்திய நாடு

சீனாவைச் சேர்ந்த லின் சியாஃபெங் என்ற 34 வயது பெண் COVID-19 விதிமுறைகளை மீறியதாக இன்று (பிப்ரவரி 7) நீதிமன்றத்தில் S$3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தனது வீட்டுக்குள் வரம்பை மீறி ஆட்களை அனுமதித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

முறையான காரணமின்றி வீட்டை விட்டு வெளியேறிய இரண்டாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.

மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

திருச்சி-சிங்கப்பூர் விமான வழித்தடம் எப்போதுமே மாஸ்… சிங்கப்பூர் சேவையில் சாதனை படைத்த “திருச்சி” – இந்தியாவிலேயே டாப்!