கட்டுமான தளத்தில் வாகனம் மோதி வெளிநாட்டு ஊழியர் மரணம் – தரையில் குந்தியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்

Shin Min Daily News

மாண்டாய் லேக் சாலைக்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று முன்தினம் மார்ச் 9 அன்று காலை 11:45 மணியளவில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு அதிக சம்பளம்.. ஜூலை முதல்

இதில் ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

அன்று காலை 11:50 மணியளவில், அங்கிருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது.

மேலும் 44 வயதுமிக்க அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டது.

சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஊழியர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாதாக சிங்கப்பூர் போலீஸ் கூறியது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

வாகனம் மோதுவதற்கு முன், அந்த ஊழியர் கட்டுமான தளம் அருகே தரையில் குந்தியிருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததையும் புகைப்படத்தில் காண முடிந்தது.

இச்சம்பவம் கட்டுமான செயல்பாடுகளால் ஏற்படவில்லை என்று மாண்டாய் வனவிலங்கு குழு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும், “இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் தேவையான ஆதரவை வழங்குவோம்” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு நற்செய்தி.. இனி சிரமம் இருக்காது