சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு நற்செய்தி.. இனி சிரமம் இருக்காது

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு பணம் செலுத்தும் முறையில் சில தடைகள் இருந்துவந்த நிலையில் தற்போது புதிய வசதி அறிமுகம் ஆகியுள்ளது.

வைஸ் (Wise) செயலியைப் பயன்படுத்தி இங்குள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை ஸ்கேன் செய்து பயணிகள் பணம் செலுத்த முடியும்.

இரு கைகளை இழந்த ஊழியருக்கு கை மாற்று சிகிச்சை… சாதித்து காட்டிய இந்திய மருத்துவர்கள்

PayNow நெட்வொர்க்குடன் வைஸ் செயலி நேரடியாக இணைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பயணிகள் அதன் செயலியின் QR குறியீட்டை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

இதன் மூலமாக, வைஸ் செயலியை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் (Wise scan-to-pay) அம்சத்தைப் பெறும் முதல் நாடு என்ற பெருமையை சிங்கப்பூர் தக்கவைக்கும்.

இது பல நாடுகளின் நாணயத்தின் மூலம் பணம் செலுத்தும் மற்ற செயலிகளை போலவே செயல்படும்.

பயணிகள் செலுத்தும் பணம் அவர்களின் வைஸ் அக்கவுண்ட்டிலிருந்து கழிக்கப்படும். அதாவது எஞ்சியுள்ள சிங்கப்பூர் டாலராகவோ அல்லது பிற நாட்டு பண மதிப்பின் அன்றைய சந்தை விகிதத்தில் மாற்றப்பட்டோ கழிக்கப்படும்.

பயனர் பணம் செலுத்துவதை உறுதிசெய்யும் முன், எந்த நாட்டு கட்டணங்ககள் மற்றும் இறுதித் தொகையையும் அது காண்பிக்கும்.

பொதுவாக கார்டு பேமெண்ட்டுகளை ஏற்காத உணவகங்காடி கடைகள் போன்ற இடங்களில், இந்த செயலியை பயன்படுத்தி பயணிகள் பணம் செலுத்த முடியும்.

பெரிய மரம் விழுந்து காரில் சிக்கிய நபர்கள்.. ஓடி உதவி காப்பாற்றிய “வெளிநாட்டு ஊழியர்கள்”