பெரிய மரம் விழுந்து காரில் சிக்கிய நபர்கள்.. ஓடி உதவி காப்பாற்றிய “வெளிநாட்டு ஊழியர்கள்”

சிங்கப்பூரில் பெய்த கனமழை
Image Credit: Lianhe Zaobao

சிங்கப்பூரில் பெய்த கனமழையின் போது நிக்கல் நெடுஞ்சாலையின் (Nicoll Highway) குறுக்கே மரம் விழுந்தது.

இதனால் நெடுஞ்சாலையின் மூன்று பாதையும் தடைப்பட்டு போக்குவரத்த்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

சிங்கப்பூர் “பஞ்சமுக ஆஞ்சநேயர்” – சக்திவாய்ந்த கோவில்.. வேண்டியது அப்படியே நடக்கும் அதிசயம்!

மேலும், கார்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற முயற்சியில் அங்கிருந்து யூ-டர்ன் செய்ய முயற்சிப்பதைக் காண முடிந்தது.

Image via Lianhe Zaobao

இதனால் குறைந்தது மூன்று கார்கள் சேதம் அடைந்திருக்கலாம் என Lianhe Zaobao கூறியது.

மரத்தின் கிளைகள் விழுந்ததால் மின் கம்பம் கீழே சாய்ந்து இருப்பதையும் காண முடிந்தது.

50 வயதான ஓட்டுநர் ஒருவர் கூறுகையில்:

மரம் விழுந்ததில் “நானும் பயணியும் காரின் உள்ளே சிக்கிக்கொண்டோம். நல்வாய்ப்பாக, நல்ல உள்ளம் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் ஓடிவந்து மரக் கிளைகளை அகற்ற உதவினர்” என்றார்.

இதன் காரணமாக “நாங்கள் தப்பிக்க முடிந்தது” என்று கூறிய அவர், வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டார்.

சிங்கப்பூரை விட்டு தப்பியோடிய ஆடவர்.. சிறை, பிரம்படி விதித்து தீர்ப்பு