சிங்கப்பூரை விட்டு தப்பியோடிய ஆடவர்.. சிறை, பிரம்படி விதித்து தீர்ப்பு

Singapore Caning
Singapore Caning

சிங்கப்பூரை விட்டு தப்பியோடிய ஆடவர் ஒருவர் மீண்டும் சிங்கப்பூர் வரும்போது பிடிபட்ட நிலையில், தற்போது அவருக்கு சிறை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிங்கப்பூரில் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது.

கடும் சட்டங்கள் கொண்ட நாடு “சிங்கப்பூர்”.. இம்மி பிசகினாலும் மரண தண்டனை தான்

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவாஸ் சோதனைச் சாவடியில் இரண்டாவது இணைப்பு வழியாக மலேசிய அதிகாரிகளால் துரத்தப்பட்ட அவர் காரை வேகமாக இயக்கி சோதனைச் சாவடியில் விபத்தை ஏற்படுத்தினார்.

அதோடு மட்டுமல்லாமல் சிங்கப்பூரைச் சேர்ந்த தியோ தியாம் லெங் என்ற அவர், குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரியின் மீது வாகனத்தை ஓட்டி காயத்தை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், எட்டு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட தியோவுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு தியோ ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தடை விதிக்கப்பட்டது.

துவாஸ் சோதனைச் சாவடி கவுன்டர்களில் மோதி, அதிகாரிக்கு காயம் ஏற்படுத்தி தப்பிக்க முயன்ற 3 பேர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!