கடும் சட்டங்கள் கொண்ட நாடு “சிங்கப்பூர்”.. இம்மி பிசகினாலும் மரண தண்டனை தான்

Capital punishment in Singapore is a legal penalty

போதைப்பொருளுக்கு எதிரான கடும் சட்டங்கள் கொண்ட சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

குறிப்பிட்ட போதைப்பொருள் வரம்பை மீறிய குற்றத்திற்காக வேண்டி சிலருக்கு தூக்கு தண்டனையையும் சிங்கப்பூர் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

சிங்கப்பூர் பொது இடங்களில் தப்பி தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள் – மீறினால் உங்க “போட்டோ” வெளியாகலாம்

“மரண தண்டனை வேண்டாம்” என்று பல உலக நாடுகள் கோரிக்கை வைத்தாலும் கூட சிங்கப்பூர் அரசாங்கம் அதன் கொள்கையில் எப்போதுமே உறுதியாக இருந்தது.

அதன் சட்ட, திட்டங்கள் தான் சிங்கப்பூரின் மாபெரும் வெற்றியாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

சட்டத்தை மீறும் அளவிலான போதைப்பொருள் கடத்தலுக்கு தூக்கு என்ற நிலைப்பாட்டில் சிங்கப்பூர் உறுதியாக உள்ளது.

போதைப்பொருள் மட்டுமல்லாமல் கொலை, கடத்தல், பயங்கரவாதம், துப்பாக்கி பயன்பாடு உட்பட முப்பத்து மூன்று கடும் குற்றங்களுக்கு சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த சட்டத்தை பொறுத்தவரை சிங்கப்பூர் குடிமக்களும், நாட்டில் வசிப்பவர்களில் பெரும்பாலானோரும் கூட அரசாங்கத்தின் முடிவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இதை வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தபட்ட ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

உலகளவில் தற்போது 110 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும், சிங்கப்பூர் உள்ளிட்ட சில சொற்பமான நாடுகள் மட்டுமே போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுகின்றன.

சிங்கப்பூர் சட்டப்படி, 15 கிராமுக்கு அதிகமாக குறிப்பிட்ட வகை போதைப்பொருளைக் கடத்தினால் மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் இல்லாத கலாச்சாரம் மற்றும் சமூகத்தை உருவாக்குவதில், இந்த நடவடிக்கை மட்டும்தான் நாட்டு குடிமக்களை தற்காக்கும் முதல் அம்சம் என்கிறது சிங்கப்பூர் அரசாங்கம்.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் இது குறித்து குறிப்பிடுகையில்; போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான சட்டங்களால் தான் பல்லாயிரம் மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதாக சுட்டிக்காட்டியது.

சமீபத்தில் வெளிநாட்டு ஊழியர் மீது கொலை வழக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நிரைவேற்றம் செய்யப்பட்டது.

வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”

சிங்கப்பூர் சிறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!

போதைப்பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் தங்கராஜு சுப்பையா தூக்கிலிடப்பட்டார்!

சிங்கப்பூரில் நடக்கவுள்ள தமிழ்ப்பட ஷூட்டிங்.. லியோ பட இயக்குனர் – நாதக சீமான் நடிப்பதாக தகவல்