சிங்கப்பூர் பொது இடங்களில் தப்பி தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள் – மீறினால் உங்க “போட்டோ” வெளியாகலாம்

சிங்கப்பூர் பொது இடங்களில்
Facebook/NEA

சிங்கப்பூர் அரசாங்கம் நாளுக்கு நாள் அதன் சுற்றுப்புறத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்.

அதன் அடிப்படையில், பொது இடங்களில் குப்பை போடுவதை ஒடுக்கும் விதமாக குற்றவாளிகளின் படங்கள் சமூக பொது இடங்களில் வெளியாகக்கூடும் என்ற எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள்

இதனால் குப்பை போடுபவர்களை பொதுமக்கள் அடையாளம் காண முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, அவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது.

இருப்பினும், சிறு குழந்தைகள், முதியவர்கள் அல்லது பலவீனமானவர்கள் என அடையாளம் காணப்படும் நபர்கள் மீது கவனம் செலுத்தப்படும் எனவும் NEA கூறியது.

குப்பை போடும் செயலுக்கு எதிரான கண்காணிப்பை மேலும் அதிகரிக்க CCTV கேமராக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 1,000 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரில் செலவு அதிகம்… இங்கு வந்தால் ஏழை தான்” – நெட்டிசன்களிடையே வலுக்கும் விவாதம்

ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள்

ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள்