வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”

bangladeshi-worker-hanged

சிங்கப்பூர் கெலாங் ஹோட்டலில் தனது காதலியை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு கடந்த பிப்ரவரி 28 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

35 வயதான பங்களாதேஷ் நாட்டவரான அகமது சலீமுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பெண்களிடம் சில்மிஷ சீண்டலில் ஈடுபட்டு பிடிபட்ட இரு இந்திய நாட்டவர்கள்

மரண தண்டனைக்கு எதிராக அவர் செய்த மேல்முறையீடு, 2022 ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க இதுபோன்ற கடும் குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயம் விதிக்கப்படும். இது சிங்கப்பூரின் குற்றவியல் நீதி அமைப்பின் ஒரு அங்கமாகும்.

என்ன நடந்தது?

34 வயதான நூரிதயாதி வார்டோனோ சூரதா என்ற இந்தோனேசிய பணிப்பெண்ணுடன் 2012 ஆம் ஆண்டு முதல் அகமது உறவில் இருந்துள்ளார்.

அவ்வாறு இருக்கையில், 2018 ஆம் ஆண்டில் அந்தப் பெண் வேறொரு ஆணுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டார்.

பின்னர், பணிப்பெண்ணுக்கு மீண்டும் வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பங்களாதேஷ் ஊழியர்கள்.

இதனால் கோபமடைந்த அகமது, சொந்த நாட்டில் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இருப்பினும், கடைசியாக ஒரு முறை சந்திக்க வேண்டும் என 2018 டிசம்பர் 30 அன்று கெலாங் ஹோட்டல் அறைக்கு அந்த பணிப்பெண்ணை அவர் அழைத்துள்ளார்.

அப்போது, இருவரும் உறவு கொண்டுள்ளனர். பின்னர் தனது 3வது காதலன் பற்றி பணிப்பெண் அகமதுவிடன் கூறியுள்ளார்.

அதாவது செல்வத்திலும், கட்டில் வித்தையிலும் அவர் உன்னைவிட சிறந்தவர் என பணிப்பெண் அகமதுவை நோக்கி கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான அகமது, பணிப்பெண்ணை துண்டை வைத்து கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

மேலும் மரணத்தை உறுதிப்படுத்த, அவர் பணிப்பெண்ணின் தலையை வலுக்கட்டாயமாக திருவியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த அறைக்கான முன்பதிவு காலாவதியான பின்னர் ஹோட்டலின் வரவேற்பாளர் அறைக்கு சென்று பார்த்தபோது சம்பவம் தெரியவந்தது.

பின்னர் அடுத்த நாளே அகமது வேலை செய்யும் நிறுவனத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்.. மீண்டும் வேலை தேட சிங்கப்பூர் நுழைய முயன்றதால் பிரம்படி

கூடுதல் விவரங்கள்

பணிப்பெண்ணை கொலை செய்த வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை!

மரணத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வெளிநாட்டு நபர்!