பணிப்பெண்ணை கொலை செய்த வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை!

Singapore foreign worker sentenced death
Singapore foreign worker sentenced to death

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கெய்லாங் ஹோட்டலில் வீட்டு பணிப்பெண்ணான தனது காதலியை கொலை செய்ததற்காக பங்களாதேஷ் ஊழியர் ஒருவருக்கு இன்று (டிசம்பர் 14) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் 31 வயதான அகமது சலீம் என்ற அந்த ஆடவர், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று கோல்டன் டிராகன் ஹோட்டலில் (Golden Dragon Hotel), தனது காதலியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்ல… முன்பதிவு ஆன்லைனில்!

அந்த நேரத்தில் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட அகமது, அந்த பணிப்பெண்ணான இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 34 வயதான நூரிதயாதி வார்டோனோ சூரதாவை (Nurhidayati Wartono Surata) துண்டை வைத்து கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், பணிப்பெண்ணின் கழுத்தில் கயிற்றை வைத்து பல முடிச்சுகளில் கட்டி, தலையை திருகியதாக கூறப்படுகிறது.

பின்னர், அந்த பணிப்பெண்ணுடைய விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடி, உடலை அங்கேயே விட்டுவிட்டு அகமது தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, பிரேத பரிசோதனையில் இறப்புக்கான காரணம் கழுத்து நெரித்தல் உள்ளிட்ட சில காரணங்களை வைத்து இது கொலை தான் என்பது கண்டறியப்பட்டது.

பணிப்பெண் தனது புதிய காதலனை விட்டு வர மறுத்ததாகவும், இந்தவழக்கில் ஒரு ஆதாரமாக கூறப்படுகிறது.

நாட்டு மக்களிடம் பிரதமர் லீ நாளை மாலை 5 மணிக்கு உரை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…