நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்.. மீண்டும் வேலை தேட சிங்கப்பூர் நுழைய முயன்றதால் பிரம்படி

migrant worker without work pass illegal entry caning
Google Maps.

சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர், சிங்கப்பூருக்குள் மீண்டும் வர முயன்றதால் சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது.

குடிநுழைவு குற்றங்களுக்காக நாடு கடத்தப்பட்ட போதிலும், அவர் சிங்கப்பூருக்குள் நீந்திவர முயன்றதாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர் சொந்த நாட்டில் தவறு செய்துவிட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன நடக்கும்?

இதன் காரணமாக 37 வயதான இந்தோனேசிய நாட்டவரான யூசோஃப் இஷாக் என்ற அவருக்கு நேற்று (பிப். 29) நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் 2022 ஆம் ஆண்டில், சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்ததற்காகவும், சுங்கம் தொடர்பான குற்றங்களுக்காகவும் அவருக்கு 10 வார சிறைத்தண்டனையும், நான்கு பிரம்படிகளும் மற்றும் S$1,000 அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

பின்னர் சிறைத் தண்டனை முடிந்து, அவர் 2022 ஜனவரியில் படகு வழியாக இந்தோனேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதனை அடுத்து, 2023 டிசம்பர் மாதத்தில் அவர் பத்தாமில் இருந்தபோது, ​​எழுத்துப்பூர்வ அனுமதியின்றி தன்னால் சிங்கப்பூருக்கு வர இயலாது என்று தெரிந்திருந்தும் கூட, அவர் வேலை தேடுவதற்காக வேண்டி சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முடிவு செய்தார்.

பின்னர் படகில் வந்த அவர் பாதி வழியில் நீரில் குதித்து சிங்கப்பூர் நோக்கி நீந்தத் தொடங்கியபோது பிடிபட்டார்.

செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்தால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் குறைந்தபட்சம் மூன்று பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

பிரம்படி கொடுக்க முடியாவிட்டால், அதற்கு பதிலாக S$6,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

வெளிநாட்டவர் சொந்த நாட்டில் தவறு செய்துவிட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன நடக்கும்?