இரு கைகளை இழந்த ஊழியருக்கு கை மாற்று சிகிச்சை… சாதித்து காட்டிய இந்திய மருத்துவர்கள்

indian man-arm-transplant-
DD News/X

இரு கைகளை இழந்த ஊழியருக்கு கை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக புதிய கைகள் இணைக்கப்பட்டன.

இறந்த பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இரு கைகளும் ஊழியருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.

பெரிய மரம் விழுந்து காரில் சிக்கிய நபர்கள்.. ஓடி உதவி காப்பாற்றிய “வெளிநாட்டு ஊழியர்கள்”

இந்தியாவை சேர்ந்த 45 வயதான ராஜ் குமார் என்ற அந்த ஊழியர் பைன்டராக (Painter) இருந்து வந்தார்.

இந்திய தலைநகர் டெல்லியை சேர்ந்த இவருக்கு 2020 ஆம் ஆண்டு நடந்த ரயில் விபத்து ஒன்றில் இரு கைகளும் பறிபோனது.

மீனா மேத்தா என்ற அந்த நன்கொடையாளர், முன்னாள் தெற்கு டெல்லி பள்ளி நிர்வாகத் தலைவராக இருந்தார்.

இந்நிலையில், மீனாவுக்கு மூளைச்சாவு பாதிப்பு ஏற்டுவதற்கு முன்பே அவர் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்து இருந்தார். இதன் அடிப்படையில் இந்த அறுவை சிகிச்சை சாத்தியமானது.

சர் கங்கா ராம் மருத்துவமனையில் உள்ள 11 மருத்துவர்கள் கொண்ட குழு இதனை வெற்றிகரமாக நடத்தி காட்டியது.

இந்த அறுவை சிகிச்சை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் “பஞ்சமுக ஆஞ்சநேயர்” – சக்திவாய்ந்த கோவில்.. வேண்டியது அப்படியே நடக்கும் அதிசயம்!