இனிமேல் ஸ்கூட் விமானப் பயணிகள் 3 கிலோ வரை மட்டுமே பொருள்களை கையில் எடுத்துச் செல்லமுடியும்..!

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

இனிமேல் ஒவ்வொரு ஸ்கூட் விமானப் பயணிகளும், 3 கிலோகிராம் வரையிலான பொருள்களை மட்டுமே கையில் எடுத்துச் செல்லமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, எக்கானமி பிரிவைச் சேர்ந்த பயணிகள் 10 கிலோகிராம் வரையிலான பொருள்களைக் கையில் எடுத்துச் செல்லலாம். மேலும், ScootPlus பிரிவுப் பயணிகளுக்கு அந்த வரம்பு 15 கி.கி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதாவது COVID-19 கிருமிப் பரவலுக்கு எதிராக ஸ்கூட் நிறுவனம் எடுத்துவரும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது.

பொருள்களின் அளவைக் குறைக்கும் நோக்கில் இந்த புதிய மாற்றம் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் பாதுகாப்பு நடைமுறைகளையும் விரைவில் முடிப்பதற்கு அது வாய்ப்பளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பயணிகள், 3 கிலோவுக்கு மேற்பட்ட Cabin Baggage பொருள்களை, check-in சேவை வழி இலவசமாக விமானத்திற்குள் ஏற்றலாம்.

மேலும் பயணிகள் அனைவரும் இனிமேல் விமானத்திற்குள் ஏறுமுன், சுகாதாரத் தகவல் படிவத்தைச் சமர்ப்பிப்பதும் விமானத்திற்குள் முகக் கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்களுக்கு: https://www.flyscoot.com/en/announcements/additional-covid-19-precautions-for-passengers