“செப்.2- ஆம் தேதி ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது”- இஸ்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

"செப்.2- ஆம் தேதி ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது"- இஸ்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Photo: ISRO

 

 

வரும் செப்டம்பர் 2- ஆம் தேதி ஆதித்யா- எல் விண்கலத்தை (Aditya-L1 Mission) விண்ணில் ஏவவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“இந்த நாட்களில் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்”- குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் தகவல்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் செப்டம்பர் 2- ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து PSLV- C57 ராக்கெட் மூலம் ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. சூரியனைக் குறித்து ஆராய்வதற்கான இஸ்ரோ அனுப்பும் முதல் விண்கலம் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து சென்னை செல்ல வேண்டிய விமானம் ரத்து!

சந்திரயான்- 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இஸ்ரோ ஆதித்யா- எல்1 விண்கலத்தை அனுப்பவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.