“இந்த நாட்களில் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்”- குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் தகவல்!

Heavier traffic expected singapore-malaysia-land-checkpoints

 

சிங்கப்பூரின் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் (Immigration and Checkpoints Authority- ‘ICA’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதி முதல் செப்டம்பர் 11- ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீரில் கண்டெடுக்கப்பட்ட மேலும் ஒரு ஆடவர் உடல் – போலீஸ் விசாரணை

ஏனென்றால், சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் செப்டம்பர் 1- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் சிங்கப்பூருக்கு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்; அதேசமயம், திங்கள்கிழமை அன்றும் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குறைந்த விலையில் iPhone வாங்க போறிங்களா? உஷார்

இந்த நாட்களில் பயணிகள் தங்கள் பயணங்களை சரியாக திட்டமிட்டு செல்ல வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.