சிங்கப்பூரில் குறைந்த விலையில் iPhone வாங்க போறிங்களா? உஷார்

சிங்கப்பூரில் குறைந்த விலையில் iPhone வாங்க போறிங்களா? உஷார்
Pic: EverythingApplePro

iPhone மோசடி வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 67 வயதுமிக்க சிங்கப்பூர் ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் 26 ஆகஸ்ட் அன்று மதியம் 3.10 மணியளவில், பிளாக் 20 கிம் மோ சாலைக்கு அருகில் இந்த மோசடி குறித்து புகார் வந்ததாக போலீசார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

95% தள்ளுபடி… எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள்.. வெறும் S$1 க்கு அதிரடி விற்பனை – ஜயண்ட் சிங்கப்பூர்

முதற்கட்ட விசாரணையில், iPhone கைப்பேசிகளை குறைந்த விலையில் விற்பதாகக் கூறி அடையாளம் தெரியாத ஆடவர் சுமார் $450 வெள்ளியை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் பணத்தை அவரிடம் ஒப்படைத்த பிறகு, அதோடு அந்த ஆடவர் திரும்பி வரவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.

விசாரணைகள் மூலமாகவும், கேமராக்களின் உதவியுடனும், கிளெமென்டி போலீஸ் அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்து, அதே நாளில் இரவு 9.30 மணியளவில் கைது செய்தனர்.

இன்று (28 ஆகஸ்ட்) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

இந்தக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

மீண்டும் ஹாட் டவல் சேவை.. அனைத்து பயணிகளுக்கும் தொடங்கப்படும் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்