சூரியனை ஆய்வுச் செய்ய ஆதித்யா- எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

சூரியனை ஆய்வுச் செய்ய ஆதித்யா- எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
Photo: ISRO

 

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று (செப்டம்பர் 02) காலை 11.50 மணிக்கு PSLV-C57 ராக்கெட் மூலம் ஆதித்யா- எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சூரியனை ஆய்வுச் செய்யும் முதல் விண்கலம் ஆதித்யா- எல்1 என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 7040, 1388 ஆகிய 4D டிரா எண்கள்

சுமார் 1,485 கிலோ எடைக் கொண்ட ஆதித்யா- எல்1 விண்கலம் 125 நாட்கள் பயணித்து எல்1 பகுதியை அடையும். பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் லாக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள, சூரியனை நோக்கிய கோணத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஆதித்யா- எல்1 விண்கலத்தை நிலைநிறுத்துவர். அதைத் தொடர்ந்து, விண்கலத்தில் உள்ள ஏழு கருவிகள் மூலம் தனது ஆய்வை ஆதித்யா- எல்1 விண்கலம் தொடங்கும்.

“அதிபராக தர்மன் தேர்வானது அம்மக்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது”- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஆதித்யா- எல்1 விண்கலம் சூரியனின் வெப்பச்சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவைக் குறித்து விரிவாக ஆய்வு செய்யும். பிளாஸ்மா அனலைசர், காந்த் புலன்களின் இருப்பிடம், சூரியனில் உள்ள துகள்கள் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளது.