“அதிபராக தர்மன் தேர்வானது அம்மக்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது”- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்தினம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
Photo: Singapore Minister Tharman

 

 

சிங்கப்பூரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்தினத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Work permits, S Pass ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மிக பெரிய மோசடி – சிக்கிய நிறுவனங்கள்

சிங்கப்பூரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், சிங்கப்பூரின் முன்னாள் துணை பிரதமரும், இந்திய வம்சாவளியும், இலங்கை தமிழருமான தர்மன் சண்முகரத்னம், சுமார் 70.40% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அத்துடன், சிங்கப்பூர் நாட்டின் ஒன்பதாவது அதிபராகத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, நாட்டின் அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங் கொக் சொங் 15.72% வாக்குகளும், டான் கின் லியான் 13.88% வாக்குகளும் பெற்று படுதோல்வி அடைந்தனர்.

அதிபராகப் பதவியேற்கவுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் அபார வெற்றி!

அந்த வகையில், சிங்கப்பூரின் 9-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தர்மனின் ஈர்க்கக்கூடிய தகுதிகள், தமிழ் பாரம்பரியம் எங்களைப் பெருமைப்படுத்துகிறது. சிங்கப்பூர் அதிபராக தர்மன் தேர்வானது அம்மக்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று குறிப்பிட்டுள்ளார்.