சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் அபார வெற்றி!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் அபார வெற்றி!
Photo: Tharman Shanmugaratnam

 

சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நேற்று (செப்டம்பர் 01) காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. வெளிநாடு வாழ் சிங்கப்பூரர்கள் வாக்களிக்க ஏதுவாக, அந்தந்த நாடுகளில் வாக்குப்பதிவு மையங்கள் சிங்கப்பூர் தூதரகம் மூலம் அமைக்கப்பட்டிருந்தது.

Work permits, S Pass ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மிக பெரிய மோசடி – சிக்கிய நிறுவனங்கள்

அதைத் தொடர்ந்து, இரவு 08.00 மணிக்கு அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தின் முதலே தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் இருந்து வந்த நிலையில், நள்ளிரவில் முழுமையான தேர்தல் முடிவுகளை சிங்கப்பூர் தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிங்கப்பூரின் முன்னாள் துணை பிரதமரும், இந்திய வம்சாவளியும், இலங்கை தமிழருமான தர்மன் சண்முகரத்னம், சுமார் 70.40% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அத்துடன், சிங்கப்பூர் நாட்டின் ஒன்பதாவது அதிபராகத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங் கொக் சொங் 15.72% வாக்குகளும், டான் கின் லியான் 13.88% வாக்குகளும் பெற்று படுதோல்வி அடைந்தனர்.

சிங்கப்பூரில் செப்.1 முதல் நடப்புக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

அதிபராகப் பதவியேற்கவுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.