ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாடா குழுமம் (TATA Group) மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines) , நவம்பர் 29- ஆம் தேதி அன்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஏர் இந்தியா நிறுவனத்துடன், விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் (Vistara Airlines) இணைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

“75 வயது சீன நபரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

இதற்கான கூட்டு முயற்சியை இணைக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் 25.1% உரிமையாளராக செயல்படுவதாக விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் 51% பங்குகளை டாடா குழுமம் தற்போது வைத்துள்ளது. மீதமுள்ள 49% பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வைத்துள்ளது.

அதேபோல், டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்துடன், விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைப்பு குறித்து டாடா குழுமத்துடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பும் இந்திய விமான போக்குவரத்து!

இந்த இணைப்பு வருகிற 2023- 2024 ஆம் நிதியாண்டுக்குள் முடிவடையும் என்று டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூட்டாக அறிவித்துள்ளது.