வானத்தில் பறந்த சில நொடிகளில் தீ விபத்து… அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்!

Photo: Air India Express

அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்ததை அடுத்து, உடனடியாகத் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் ரத்து: 5 பேருக்கு நீதிமன்றம் கெடு

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், இன்று (பிப்.03) அதிகாலை 184 பயணிகளுடன் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. விமான ஓடுப்பாதையில் இருந்து வானத்திற்கு உயர்ந்து சுமார் 1,000 அடிகளை விமானம் தொட்டிருந்த நிலையில், விமானத்தின் இரண்டு எஞ்சின்களில் ஒன்றில் தீப்பிடித்துக் கொண்டது. இதைக் கவனித்த விமானிகள் குழு, உடனடியாக அபுதாபி சர்வதேச விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தது.

சிங்கப்பூர் பழைய கட்டடங்களுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்… துணைப் பிரதமர் ஹெங் அவர்கள் உரை!!

இதையடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அவசர அவசரமாக அபுதாபி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த தகவலை உறுதிச் செய்துள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது.