500 புதிய ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டம்!

Photo: Air India

500 புதிய ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன.

SBS பேருந்துகள், கார் இடையே விபத்து: பேருந்து பயணிகள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் (Tata Group) சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது ஏர் இந்தியா வசம் 153 விமானங்கள் உள்ளன.

ஏர் இந்தியாவை விஸ்தாரா (Vistara Airlines) உடன் இணைத்தப் பின், இந்த எண்ணிக்கை 218 ஆக அதிகரிக்க உள்ளது. இந்த நிலையில், 8.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 புதிய ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் விபத்து: கடும் போக்குவரத்து நெரிசல்

400 குறுகிய அகலம் கொண்ட ஜெட் விமானங்களையும், 100 அகலம் அதிகமான ஜெட் விமானங்களையும் வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்துக்கும் அதிகமாக ஏ 350, போயிங் 787, போயிங் 777 ரக பிரம்மாண்ட விமானங்களும் இந்த பட்டியலில் உள்ளன.