பெங்களூரு- சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ள ஏர் இந்தியா!

Photo: Air India

 

பெங்களூரு- சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) புறப்படும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 05.40 மணிக்கு சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

Singapore Pools டிக்கெட் எடுத்து ஏமாந்த பெண் – $400 மோசடி செய்யப்பட்டதாக பதிவிட்டு விழிப்புணர்வு

மறுமார்க்கத்தில், சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 06.40 மணிக்கு புறப்படும் விமானம், காலை 08.35 மணிக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும். எனினும், இந்த விமான சேவை தினசரி விமான சேவை கிடையாது.

வாரத்தில் திங்கள்கிழமை, வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்களுக்கு இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் சிங்கப்பூர் உட்பட சர்வதேச பயணிகளின் கவனத்திற்கு… பல பொருட்களுக்கு அனுமதி மறுப்பு

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் https://www.airindia.com// என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.