Singapore Pools டிக்கெட் எடுத்து ஏமாந்த பெண் – $400 மோசடி செய்யப்பட்டதாக பதிவிட்டு விழிப்புணர்வு

singapore pools
Stomp

Singapore Pools டிக்கெட் எடுக்க சுமார் $400 பணத்தை தாய்லாந்துக்கு பரிமாற்றம் செய்த பெண் ஒருவர் மோசடிக்கு ஆளானார்.

ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து தாம் $400 தொகையை இழந்ததாகவும், மற்றவர்கள் இதே போல மோசடியில் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் இதனை பகிர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் சிங்கப்பூர் உட்பட சர்வதேச பயணிகளின் கவனத்திற்கு… பல பொருட்களுக்கு அனுமதி மறுப்பு

“நான் மோசடியில் ஏமாற்றம் அடைந்தது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று எனக்குத் தெரியும், ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதுவே எனது முக்கிய நோக்கம்” என்று லோ என்பவர் ஸ்டாம்ப் தளத்திடம் கூறினார்.

அக்டோபர் 17 அன்று, Gentlmen’s Agreement என்ற பெயரில் போலியான பேஸ்புக் பதிவை பார்த்து தாம் ஏமாற்றம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் “Pick The Score” என்னும் கால்பந்து போட்டிக்கான சிங்கப்பூர் பூல்ஸ் பந்தய சீட்டும், $29,000 க்கான UOB காசோலையும் கையில் வைத்திருக்கும் புகைப்படமும் இருந்தது.

நாமும் சேர்ந்து வெற்றி பெறலாம் என்ற ஆசையில் அவர் அந்த பக்கத்தை தொடர்பு கொண்டு $400 பணத்தை தாய்லாந்துக்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

அது போதாது கூடுதலாக $400 வேண்டும் பணத்தை மாற்றி விடுங்கள் என்று மோசடி கும்பல் கூறியுள்ளது.

ஆனால், அவர் அவ்வாறு செய்ய மறுத்துள்ளார். அவர்கள் பணத்தை அனுப்ப வேண்டும் என மாறி மாறி பேசவும் அவருக்கு சந்தேகம் வலுத்தது.

பின்னர் வங்கியை தொடர்பு கொண்டு செலுத்திய பணத்தை திரும்ப பெற முடியுமா என கேட்டுள்ளார்.

ஆனால் அவர் பணத்தை செலுத்த PromptPay ஐப் பயன்படுத்தியதால் அது திரும்பப்பெற முடியாது என்று வங்கி கூறியது.

மேலும் இது சட்டவிரோதமான ஆன்லைன் பந்தயமாக கருதப்பட்டதாகவும் அது கூறியது.

இதனால் தாம் பாடம் கற்றுக்கொண்டதாகவும், “எளிதாக பணத்தை வெற்றி பெறலாம் என்று ஒருபோதும் நம்பாதீர்கள்” என்றார்.

சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் பண நோட்டுகளை மறைத்து வைத்து குறிப்பு கொடுக்கும் டிக்டாக் பயனர்