சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் பண நோட்டுகளை மறைத்து வைத்து குறிப்பு கொடுக்கும் டிக்டாக் பயனர்

man-hides-money-around-singapore tiktok
@communitybenefactor

இனி வெளிப்புறத்தில் நடமாடும்போது நீங்கள் கவனமாக இருங்கள், ஏனெனில் S$50 பண நோட்டுகள் உங்களை சுற்றி மறைந்து இருக்கலாம்.

@communitybenefactor என்ற கணக்கு கொண்ட டிக்டாக் பயனர் ஒருவர், சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் பண நோட்டுகளை மறைத்து வைத்து, அந்த இடத்தின் வீடியோக்களை டிக்டாக்கில் பதிவிட்டு வருகிறார்.

இந்திய ஊழியருக்கு சிறை, பிரம்படி.. இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று நாசம் செய்த ஊழியர்

ஒரு வீடியோவில், S$50 பண நோட்டை குடியிருப்பின் கீழ்த்தளத்தில் நீல நிற இருக்கை ஒன்றில் மறைத்து வைக்கிறார், பின்னர் அதன் சுற்றுப்புற பகுதியை சிறிய வீடியோவாக விரைவாக காட்டினார்.

அந்த வீடியோ சுமார் 418,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

அவர் மீதமுள்ள வீடியோக்களையும் இதேபோன்று வெளியிட்டுள்ளார்.

அவர் இதேபோன்று தினமும் பணத்தை மறைத்து வைப்பதாக அவரது வீடியோக்களில் தலைப்புகளில் கூறியுள்ளார்.

முந்திய நாள் பணம் எடுக்கப்பட்டால் அடுத்த நாள் அதிக பணத்தை மறைத்து வைக்கிறார்.

இந்நிலையில், பலர் இதனால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். பணம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.

“நாங்க இருக்கும் இடத்துலயும் பணத்தை வைங்க” என்று பலர் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இனி கப்பலில் வரலாம் – கட்டணம் எவ்ளோ?