விமானப் போக்குவரத்துத்துறையில் வேலை! – தேவையான பயிற்சியும் தகுதியும் உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்
ஆண்டிறுதியில் அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் சிங்கப்பூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதைச் சமாளிக்க,மேலும் பல ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்திற்கு நேற்று அவர் வருகையளித்தார்.அக்டோபர் மாதம் முதல்,விமானச் சேவை எண்ணிக்கை கோவிட்-19 தொற்று பரவலுக்கு முன்பிருந்த அளவை எட்ட சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

தொற்றுக்கு முன்பிருந்த அளவில் 64 சதவீதம் தற்போது எட்டியுள்ளது.பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப போதுமான மனிதவளம் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறிய அவர்,மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர் என்றார்.
தற்போது காலிப்பணியிடங்களில் ஊழியர்கள் நிரப்பபடுவதால் இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் 4000க்கும் அதிகமானோர் இத்துறையில் பணியமர்த்தப்பட்டனர்.

பணியர்மத்தப்படுவோர் தேவையான தகுதியைப் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.எனவே,இது எளிதான பணியன்று.இது பெரிய அளவிலான நடவடிக்கையாகும்.விமானப் போக்குவரத்துத்துறையின் அனைத்துப் பங்குதாரர்களும் இதில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று கூறினார்.

ஆண்டிறுதிக்குள் 70 மில்லியன் பயணிகளைக் கையாள முடிவதை உறுதி செய்வதற்கான இலக்கை நோக்கி செயல்படுவதாகவும் அவர் கூறினார்.