பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

வரும் ஏப்ரல் 21- ஆம் தேதி அன்று ரம்ஜான் கொண்டாடப்படவுள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள கடை வீதிகளில் மக்கள் புத்தாடைகள் உள்ளிட்டவைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், இஸ்லாமியர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில், பிரத்யேகச் சந்தையும் தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் இளம் கால்பந்து வீரர் காலமானார்!

இந்த நிலையில். ரம்ஜானையொட்டி, இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் 6- ஆம் தேதி அன்று மாலை சிங்கப்பூரில் தெக் வாய் கிரசெண்டில் உள்ள அல்-கைர் பள்ளிவாசலில் (Al- Khair Mosque) நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கலந்துக் கொண்டார்.

பங்குனி உத்திரம் திருவிழா: புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மசகோஸ் ஸூல்கிஃப்லி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பின்னர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், செல்போனில் அனைவருடனும் செல்பி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்.