பங்குனி உத்திரம் திருவிழா: புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Photo: Holy Tree Sri Balasubramaniar Temple Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள யீஷுன் இண்டஸ்ட்ரியல் பார்க்கில் (Yishun Industrial Park A) அமைந்துள்ளது புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் (Holy Tree Sri Balasubramaniar Temple). இன்று (ஏப்ரல் 05) பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, அதிகாலை முதலே பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

தூங்காததால் குழந்தையின் கையைக் கடித்த இல்லப் பணிப்பெண்ணுக்கு ஆறு மாதச் சிறை!

முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஆராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

Photo: Holy Tree Sri Balasubramaniar Temple Official Facebook Page

இந்த நிலையில், புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு வருகை தந்த சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங்- க்கும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சாமியை அமைச்சர் தரிசனம் செய்தார்.

இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் கோழி முட்டைகள்!

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரர்கள் உள்ளிட்டோரும் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதனால் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திரம் திருவிழா களைக்கட்டியுள்ளது. கோயில் முழுவதும் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 05) மட்டும் சுமார் 5,000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.