தூங்காததால் குழந்தையின் கையைக் கடித்த இல்லப் பணிப்பெண்ணுக்கு ஆறு மாதச் சிறை!

indian-origin-singapore-jailed

இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர் 33 வயதான மசிட்டா கொரிடடுரோசாமா. இவர், கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள ஒரு வீட்டில் இல்லப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் நாளை பங்குனி உத்திரத் திருவிழா!

இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு மே மாதம் 26- ஆம் தேதி அன்று வீட்டில் பணிப்பெண் தனது வேலையைச் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் இருந்த 14 மாதக் குழந்தையைத் தூங்க வைக்க முயன்றார். ஆனால், அந்த குழந்தைத் தூங்காமல் அழுந்துக் கொண்டிருந்தது. இதனால் எரிச்சலும், கோபமும் அடைந்த பணிப்பெண், குழந்தையின் இடது கையைக் கடித்துவிட்டார்.

பணியை முடித்துக் கொண்டு, குழந்தையின் தாயார் அன்றைய தினம் இரவு 07.00 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தார். இரவு உணவருந்திய பிறகு குழந்தையைத் தூங்க வைக்க சென்றார். அப்போது, குழந்தையின் கையைப் பார்த்த தாயார், பல்லால் கடித்த அடையாளம் இருப்பதைக் கண்டார். இது குறித்து, பணிப்பெண்ணிடம் அவர் கேட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் கோழி முட்டைகள்!

அதற்கு பணிப்பெண், தனக்கு இது குறித்து தெரியாது என்றார். பின்னர், தொடர்ந்து கேட்க, தான் குழந்தையின் கையைக் கடித்ததை ஒப்புக் கொண்டு, காலில் விழுந்து குழந்தையின் தாயாரிடம் மன்னிப்புக் கேட்டார். இதைத் தொடர்ந்து, குழந்தையுடன் புறப்பட்ட தாயார், காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துவிட்டு, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சைக் கொடுத்தனர்.

இதையடுத்து, இல்லப் பணிப்பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பணிப்பெண் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பச்சிளம் குழந்தையைக் கடித்த பணிப்பெண்ணுக்கு எட்டு முதல் ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும்” என்று கோரினார்.

பாஸ்போர்ட் இல்லை.. வெளிநாட்டவர் சிங்கப்பூரில் கைது

பணிப்பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தனது தவறை உணர்ந்து முதலாளியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்” என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குழந்தையின் கையைக் கடித்த பணிப்பெண்ணுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். மேலும், தண்டனையை நிறைவேற்ற அந்த பணிப்பெண், வரும் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.