இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் கோழி முட்டைகள்!

Photo: Singapore Food Agency Official Facebook Page

இந்தியா, தாய்லாந்து, மலேஷியா, போலந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு கோழி முட்டைகள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூருக்கு முட்டைகள் இறக்குமதி செய்வதற்கான பட்டியலில் இந்தோனேசியாவும் இணைந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிங்கப்பூர் உணவுக் கழகம் (Singapore Food Agency- ‘SFA’) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பாஸ்போர்ட் இல்லை.. வெளிநாட்டவர் சிங்கப்பூரில் கைது

அதில், கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு முட்டை இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 12 ஆக இருந்த நிலையில், தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூருக்கு தேவையான முட்டைகளில் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் பண்ணைகளில் இருந்தும் முட்டைகள் உற்பத்திச் செய்யப்படுகிறது.

சிங்கப்பூரில் முட்டையைச் சாப்பிடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அதன் தேவை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் நாளை பங்குனி உத்திரத் திருவிழா!

கடந்த 2022- ஆம் ஆண்டு புரூனேவில் இருந்து சிங்கப்பூருக்கு முட்டைகள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது நினைவுக்கூறத்தக்கது.

இதனிடையே, சிங்கப்பூர் முட்டைகளை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கான பட்டியலில் இந்தோனேசியா சேர்க்கப்பட்டுள்ளதை, சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அனுமதியைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கு விரைவில் இந்தோனேசிய கோழி முட்டைகள் வந்து சேரும், பின்னர், அதனை வியாபாரிகள் வாங்கிச் சென்று, பொதுமக்களுக்கு விற்பனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.