வாட்ஸ்அப் கணக்குகளை குறிவைக்கும் மோசடி கும்பல் – எச்சரிக்கை பதிவு!

Alert on resurgence of scams involving the takeover of WhatsApp accounts.

சமீபத்தில், வாட்ஸ்அப் கணக்குகள் மோசடி மீள் எழுச்சி பெற்றுள்ளது, இது குறித்து ஒரு எச்சரிக்கை அனைவரிடத்திலும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்த வகையான வாட்ஸ்அப் மோசடியில், பாதிக்கப்படுபவர் ஒரு நண்பரிடமிருந்து ஒரு வாட்ஸ்அப் செய்தியைப் பெறுவார், அதன் பிறகு வாட்ஸ்அப் கணக்கு சமரசம் செய்யப்பட்டு, 6 இலக்க சரிபார்ப்புக் குறியீட்டு எண்ணை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறது.

6 இலக்க சரிபார்ப்புக் குறியீட்டை வழங்கிய பின்னர், பாதிக்கப்படும் பயனர் தனது வாட்ஸ்அப் கணக்கிற்கான அணுகலை இழக்க நேரிடும்.

இது போன்ற மோசடிகளில் இருந்து விடுபெற பொதுமக்கள் பின்வரும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்:

1. உங்கள் கணக்கு சரிபார்ப்புக் குறியீட்டு எண்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

2. உங்கள் வாட்ஸ்அப் தொடர்பில் உள்ளவர்கள் மூலம் அனுப்பப்பட்டிருந்தாலும் சரி, வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட இது போன்ற மோசடி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

3. நீங்கள் பெற்ற கோரிக்கையின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய எப்போதும் உங்கள் நண்பரை கால் மூலம் அழைக்கவும், ஆனால், சமூக ஊடக தளத்தின் மூலம் இதுபோன்று செய்ய வேண்டாம், ஏனெனில் அவர்களின் கணக்கை மோசடி செய்பவர்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.

4. உங்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டின் ‘அமைப்புகள்’ வழி சென்று ‘கணக்கு’ -இன் கீழ் கிடைக்கும் ‘இரண்டு-முறை சரிபார்ப்பு’ (Two-Step Verification) அம்சத்தை இயக்குவதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை முறையாக பாதுகாக்கலாம். இது உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மற்றவர்கள் இயக்குவதில் இருந்து தடுக்கும்.

5. உங்கள் வாட்ஸ்அப் கணக்கு மோசடி கும்பலால் கையகப்படுத்தப்பட்டால், உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உங்கள் வாட்ஸ்அப்பில் உள்நுழைந்து உங்கள் கணக்கை மீட்டெடுக்கலாம்.

6. உங்கள் தொலைபேசியில் நீங்கள் பெறும் சரிபார்ப்பு எண்ணை உள்ளிட்டு அங்கீகரிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் கணக்கை மோசடி கும்பல் பயன்படுத்தினால் அவர்கள் தானாகவே வெளியேற்றப்படுவர்.