மலேசிய ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற “சிங்கப்பூர் பாடகர்” – S$32,093 பரிசுத்தொகையை தட்டிச்சென்றார்!

astrogempak/Instagram

சிங்கப்பூரை சார்ந்த பாடகர் 30 வயதான அலிஃப் அஜீஸ், மலேசியாவின் பாட்டு பாடும் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘Gegar Vaganza’வின் எட்டாவது சீசனின் வெற்றியாளராக தேர்தெடுக்கப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 23) இரவு நடந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது சிங்கப்பூரர் இவர் ஆவார்.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞரின் மரண தண்டனை வழக்கு: ஜன.24 மேல்முறையீடு விசாரணை என்ன ஆனது?

முன்னாள் சிங்கப்பூர் வெற்றியாளர் ஹேடி மிர்சா 2019ஆம் ஆண்டு நிகழ்ச்சியின் ஆறாவது சீசனுக்கான இணை வெற்றியாளராக தேர்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றிக்கான பரிசுத்தொகையாக சுமார் RM100,000 (S$32,093) மற்றும் கோப்பையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார் அலிஃப்.

மேலும் அவருக்கு ‘Anugerah Bintang Paling Power Meow’ என்னும் மிக சக்திவாய்ந்த நட்சத்திர விருது பிரிவில் RM2,000 (S$640) பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

அவரின் இந்த வெற்றி சில மலேசியர்களுக்கு பிடிக்காத காரணத்தால் அவர் எப்படி வெற்றி பெற்றார் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பயனியர் சாலை அருகே தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து – கட்டுமானக் கழிவுகளின் பெரும் குவியலில் பற்றிய தீ