சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞரின் மரண தண்டனை வழக்கு: ஜன.24 மேல்முறையீடு விசாரணை என்ன ஆனது?

Drug trafficker's appeal against death sentence adjourned
REUTERS

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் கே.தர்மலிங்கத்தின் மேல்முறையீட்டு விசாரணை நேற்று திங்கட்கிழமை (ஜன.24) நடைபெற இருந்தது.

ஆனால், அந்த வழக்கு விசாரணை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிசயம் கண்டிப்பா நடக்கும் என நம்பி இருக்கும் அக்கா… சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு மரண தண்டனை ரத்தாகுமா?

நாகேந்திரனின் வழக்கறிஞர் திரு எம். ரவிக்கு பதிலாக இந்த வழக்கை நடத்த உள்ள புதிய வழக்கறிஞர் திருமதி வயலட் நெட்டோ (Ms Violet Netto), இந்த ஒத்திவைப்புக்கு விண்ணப்பித்திருப்பதை புரிந்துகொள்ள முடிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

தனது மரணதண்டனையை எதிர்த்து மறுஆய்வு நடவடிக்கைகளை தொடங்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கின் புதிய விசாரணை தேதி பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

நாகேந்திரன் கடந்த 2009ஆம் ஆண்டு ஹெராயின் கொண்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

அதாவது 42.72 கிராம் ஹெராயின் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பயனியர் சாலை அருகே தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து – கட்டுமானக் கழிவுகளின் பெரும் குவியலில் பற்றிய தீ