சிங்கப்பூர் வரும் இந்தியா உள்ளிட்ட அனைத்து பயணிகளுக்கும் புதிய அப்டேட் – Work Pass-க்கும் பொருந்தும்!

singapore visa removed

எந்த நாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தாலும் சரி, தற்போது அனைத்துப் பயணிகளும் மெய்நிகர் (virtually) மேற்பார்வை ART சோதனை மூலம் புறப்படுவதற்கு முந்தைய (pre-departure) கோவிட்-19 சோதனைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த புதிய நடைமுறை குறுகிய கால வருகையாளர்களைத் தவிர அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும்.

தண்டனை காலம் முடிந்தாலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வரை சிறை!

முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் அல்லது பகுதிகளில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் மட்டுமே இந்த மெய்நிகர் மேற்பார்வை ART மேற்கொள்ள முடியும்.

சுற்றுலாப் பயணிகள் போன்ற குறுகிய கால வருகையாளர்கள் Overseas testing centre என்னும் வெளிநாட்டு சோதனை மையத்திலிருந்து பெறப்பட்ட கோவிட்-19 சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

இந்த மாற்றத்தை சுகாதார அமைச்சகம் (MOH) இன்று பிற்பகல் (ஏப்ரல் 5) அதன் இணையதளத்தில் வெளியிட்டது.

மேற்கண்ட பயணிகள் MOHன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சேவை வழங்குநர்கள் மூலம் மெய்நிகர் ART சோதனைகளை எடுக்க வேண்டும்.

சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள் அந்த சோதனை எடுக்கப்பட வேண்டும் என்றும் பயணிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் அப்பாய்ன்ட்மென்ட்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து, தங்களுடைய சொந்த ART கருவிகளைத் தயாராக வைத்திருக்கும்படி MOH கேட்டுக் கொண்டது.

சாலையில் சண்டையிட்டு கொண்ட 10 பேர்.. வீடியோ வைரல் – அனைவரையும் தேடி வரும் போலீஸ்