செங்காங் ஈஸ்ட் ரோட்டில் ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து – ஒருவர் மரணம்

ambulance-crash-driver dies sengkang/

செங்காங் ஈஸ்ட் ரோட்டில் அக்., 20 ஆம் தேதி தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று மரத்தில் மோதியதில் 60 வயது ஆடவர் உயிரிழந்தார்.

செங்காங் ஈஸ்ட் சாலை மற்றும் செங்காங் ஈஸ்ட் அவென்யூ சந்திப்பில் கடந்த வியாழன் காலை 8.20 மணியளவில் சாலை விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பளம் சரியாக பெறாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓடி உதவிய மனிதவள அமைச்சகம்: வாய்மூடி சம்பளத்தை கொடுத்த நிறுவனம்

ஓட்டுநர் இருக்கையில் அந்த ஆடவர் சிக்கி இருந்ததாகவும், பின்னர் அவரை அதிலிருந்து மீட்க ஹைட்ராலிக் மீட்பு கருவி பயன்படுத்தப்பட்டது என்றும் SCDF தெரிவித்துள்ளது.

மயக்க நிலையில் மீட்கப்பட்ட ஓட்டுநராக அந்த ஆடவர், செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் மரணித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆம்புலன்ஸ் செங்காங் ஈஸ்ட் சாலையில் புவாங்காக் கிரீன் நோக்கி பயணித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து ஆம்புலன்ஸ் சறுக்கி ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

பயன்படுத்திய உள்ளாடைகளை அசல் வியர்வை வாசனையுடன் விற்கும் இளம்பெண்… அதற்கும் தேவை அதிகம் – முன்பதிவு அவசியமாம்