‘அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் வாரத்துக்கு நான்கு முறை விமான சேவையை வழங்கவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’!

COVID-19: SIA Group reports 60% decline in passenger carriage

உலகில் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது. அதேபோல், ஏழை நாடுகள், அண்டை நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளை வல்லரசு நாடுகள் அனுப்பி உதவி வருகின்றன. இதனால் சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 70%- க்கும் மேல் உள்ளது.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் சிங்கப்பூர் வரலாம்!

இச்சூழலில் சிங்கப்பூர் அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதை திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டோருக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் கீழ் (Vaccinated Travel Lanes- ‘VTLs’) புரூணை, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளுக்கு ஏற்கனவே சிங்கப்பூர் பொது விமானத்துறை ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

அதைத் தொடர்ந்து, இந்த நாடுகளுக்கு இரு மார்க்கத்திலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, கனடா, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் தற்போது சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு மிக அதிக மதிப்பு!

இந்த நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் (Singapore Airlines- ‘SIA’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனம் அமெரிக்காவின் சியாட்டலுக்கும் (Seattle), கனடாவின் வான்கூவருக்கும் வாரத்துக்கு நான்குமுறை விமானங்கள் இயக்கப்படும். வாரத்திற்கு நான்கு முறை இடம் பெறவுள்ள சியாட்டல்- வான்கூவர் – சிங்கப்பூர் பயணங்களில் இரண்டு பயணங்களானது கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டோருக்கான சிறப்பு பயணப் பாதை திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பயண ஏற்பாட்டின் கீழ், SQ29 என்ற விமானம், வாரத்துக்கு இரண்டு முறை இயக்கப்படும். அது சியாட்டல் விமான நிலையத்தில் இருந்து காலை 11.00 மணிக்குப் புறப்பட்டு 11.45 மணிக்கு வான்கூவர் (Vancouver) விமான நிலையத்தில் தரையிறங்கும். பின்னர், அந்த விமான பிற்பகல் மணி 01.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் சிங்கப்பூர் நேரப்படி, இரவு மணி 10.05 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கும். இந்தச் சேவை, வரும் டிசம்பர் 2- ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15- ஆம் தேதி வரை வழங்கப்படும். இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (12/10/2021) நண்பகல் தொடங்குகிறது.

சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாகக் குறைந்த கொரோனா பாதிப்பு!

அதேபோல், தடுப்பூசிப் போட்டுக் கொண்டோருக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் கீழ், வரும் அக்டோபர் 20- ஆம் தேதி முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையை வழங்கவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ34 சிங்கப்பூரிலிருந்து மாலை 06.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 07.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவை (San Francisco) வந்தடைகிறது. பின்னர் விமானம் SQ33 அங்கிருந்து இரவு 10.05 மணிக்குப் புறப்பட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிகாலை 05.45 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை வந்தடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.